பொருளாதார முகாமைத்துவக் குழுவை ரத்து செய்த ஜனாதிபதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்பட்ட பொருளாதார முகாமைத்துவக் குழுவை முழுமையாக நீக்கி விடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவையில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட ஆய்வின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் ஜனாதிபதியினால் இக்குழுவை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதனை நிறைவேற்ற முடியாது போனது.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் அமைச்சரவையினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவையில் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.