பொருத்தமான வாசனை திரவியத்தை தேர்ந்தெடுப்பது அவசியம்

பொருத்தமான வாசனை திரவியத்தை தேர்ந்தெடுப்பது அவசியம்

வாசனை திரவியம் தேர்ந்தெடுக்கும் போது தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.

பொருத்தமான வாசனை

சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும்.

அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது. வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

பொருத்தமான வாசனை

கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்கவேண்டாம், கடையின் ஏசி மற்றும் வாசனையின் தன்மை இருக்காது. இது உண்மையான மணத்தை சொல்லிவிடும்.

கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வையையும் தாண்டி நிற்கும்.

இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது ‘சிட்ரஸ்’ நறுமணங்களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சியூட்டும்..

பொருத்தமான வாசனை

வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கிவிடும். எனவே பெர்பியூமின் உள்ளடக்கங்களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரிபார்ப்பது முக்கியம்.

உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]