பொய்யான வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்- ருவன் குணசேகர அவசர அறிவிப்பு

தண்ணீர் ஏதோவொன்று கலந்துவிடப்பட்டுள்ளதாக, சில பிரதேசங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம். அந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களனி, கிரிபத்கொட, ஜாஎல ஆகிய பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியில் நிலையில், பொலிஸாரின் அவசர அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி விஷமிகள் இவ்வாறான போலியாக தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]