பொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது

குடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பிய சந்தேகநபர்கள் இருவர் ப்ளூமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு -15, மாதம்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்திற்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு இலக்கம் – 6 நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]