பொன்சேகா, பாலித ரங்கேவுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா  மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகிய இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பிரச்சாரம் மேற்கொள்வதனை தவிர்த்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா- பாலித ஆகிய இருவரும் ஊடகங்களில் அண்மைகாலமாக கருத்து மோதலில் ஈடுபடுகின்றமை அதிகரித்துள்ளமையால் அதனை நிறுத்திகொள்ளுமாறு பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை) பணிப்புரை விடுத்துள்ளதாக ஐ.தே.க.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களாவர். ஆனாலும் தற்போது பிரசாரங்களில் ஈடுபடும்போது, ஒருவரை ஒருவர் குறை கூறி மிகவும் கீழ்தரமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி வருவதாக ஐ.தே.க உறுப்பினர்களால் பகிரங்கமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பிரதமர், இவ்விருவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]