பொன்சேகாவுக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை

பொன்சேகாவுக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பி.  பிரதமரிடம் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில்  கேள்வி   எழுப்பியதற்கு  பிரதமர் மேலும் கூறியதாவது,

பொன்சேகாவுக்கு

சரத் பொன்சேகாவை முப்படைகளின் பிரதானியாக நியமிப்பது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அத்துடன், கூட்டுப் படைகளின் பிரதானிப் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டுமென்றாலும் அதற்கு அரசமைப்பின் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இருக்கின்றார். இதற்குரிய திறமை, தகுதி சரத் பொன்சேகாவுக்கு இருப்பதாலேயே 2010 இல் அவரை பொதுவேட்பாளராக களமிறக்கினோம். சரத் பொன்சேகா திறமையானவர் என்பது ஜனாதிபதிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலேயே அமைச்சரவையில் பேசப்பட்டது – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]