பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

அம்பாறை, பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிலையில், இச்சம்பவத்தில் 34 வயதுடைய தாயும் அவரது 6 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, சம்பவத்தில் காயமடைந்த 11 வயதுடைய மகன் மற்றும் 12 வயதுடைய மகள் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சிறிய ரக காரொன்று வீதியை விட்டு விலகிமையே விபத்துக்கு காரணமென தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]