பொது மக்களுக்கு ஏற்படும் எந்தவொரு தொந்தரவுக்கும் உடன் அழையுங்கள்!

பொது மக்களுக்கு ஏற்படும் எந்தவொரு தொந்தரவு பற்றியும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

விசேட ஊடக அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனை அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் சேவை மற்றும் பொலிஸ் மா அதிபர் செயலகம் போன்ற நிறுவனங்களின் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு – 1960 அல்லது 0115107722

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு – 1996 அல்லது 0112 505 575

இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரிவு – 119

பொது மக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளின் போது இந்த இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்து அவை தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]