பொது நிதிகளை ஒருபோதும் சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது

பொது நிதிகளை ஒருபோதும் சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தவதற்கு விடவும் கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பட்டிருப்புத் தொகுதிக்குட்பட்ட மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் சிரம சக்தி வேலைத்திட்டத்தினூடாக கழகத்தின் தலைவர் தினேஸ் தலைமையில் புதன்கிழமை (12) இடம்பெற்ற மகிழூர்முனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக வரக் கூடியவர்கள். எனவே அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன். இளைஞர்கள் கழகங்களினூடாக பல்வேறு பொது விடயங்களில் பங்கெடுப்பது மகிழ்வுக்குரிய விடயம். இதே போன்று அவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்குமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு நாங்கள் எப்போதும் உதவியாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.

இங்கு நான் முக்கியமாகக் கூறிக் கொள்ளும் விடயம் யாதெனினல், பொது நிதிகளை கையாளும் விடயத்தில் இளைஞர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நிதிகளை நீங்கள் கையாளும் விதத்தில் தான் மக்கள் மத்தியில் அளவிடப்படுவீர்கள். பொது நிதிகளை ஒருபோதும் சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தவதற்கு விடவும் கூடாது. எனவே இவ்வாறான விடயங்களில் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

பொது நிதிகளை பொது நிதிகளை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]