பொதுழுபோக்கிற்காக வலை போட்ட இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் அதிகாரியொருவர் சேறும் சகதியுமான குட்டையொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய வீதியை அண்டி வசிக்கும் புதிய காத்தான்குடி- 06ஐச் சேர்ந்த ஏ. றம்ழான் முஹம்மது றியாஸ் (வயது 34) என்பவரின் சடலமே ஞாயிற்றுக்கிழமை மாலை 22.04.2018 பாலமுனையிலுள்ள குட்டையொன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, இவர் பொழுது போக்கிற்காக அந்தக் குட்டையில் இறங்கி வலைகளைக் கட்டி மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது சேறும் சகதியுமான அந்தக் குட்டையில் சிக்கி வெளியே வரமுடியாது நீரில் அமிழ்ந்து மரணித்துள்ளார்.

சம்பவம்பற்றி பொலிஸாருக்கு தகவல் கிட்டியதும் உடனடியாக ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பாலமுனை வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]