பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் மது அருந்தியவர்கள் கைது

பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் மது அருந்தியவர்கள் கைது. 

மது அருந்தியவர்கள்

நேற்று மாலை வவுனியா – நெளுக்குளம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் மதுவருந்திய நால்வரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய நால்வரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் இன்றையதினம் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]