பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு

வெசாக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரின் பாதுகாப்பு பணிகளில் சுமார் மூன்றாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களுக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் சுமார் 1900 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 1,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]