பொதுபலசேனாவின் ஆதரவு புத்தபெருமானுக்கு மாத்திரமே

“யார் அரசியலுக்கு வந்தாலும், எவருக்கும் ஆதரவு வழங்க மாட்டோம். நாம் ஆதரவு வழங்கப் போய் பெற்றுக் கொண்டது போதுமானது. எமது ஆதரவு எப்போதும், புத்தபெருமானுக்கு மாத்திரமே ஆகும்” என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பொதுபல சேனா மீண்டும் ஒருபோதும் உதவி புரிய மாட்டாது எனவும் அவ்வாறு செய்யப் போய், கடந்த 2015 ஆம் ஆண்டில் வாங்கிக் கொட்டியது போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அரசியலுக்கு வந்தால், பொதுபல சேனாவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்குமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கோட்டாபயவுக்கு, வீட்டு வேலைகள் செய்வதற்கு அதிகம் எஞ்சியுள்ளன. அவற்றை முடித்து விட்டு அரசியலுக்கு வந்தால், இந்த நாட்டு அரசியலை ஒழுங்காக முன்னெடுக்கலாம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]