பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி லண்டனுக்கு பயணம்

லண்டனில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம், பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே, “பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அடுத்தவாரம் பிரித்தானியா செல்கிறார்.

பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்த மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டனில் தங்கியிருக்கும் போது. பிரித்தானிய பிரதமர் தெரெசா மே மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார” என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]