பொதுத் தேர்தலுக்கு தயாராவதே அடுத்த இலக்கு

பொதுத் தேர்தலுக்கு தயாராவதே ஒன்றிணைந்த எதிரணியின் அடுத்த இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு பெற்றுக் கொடுத்த தீர்ப்பின் பின்னர் அரசாங்கம் பாடம் படித்துக் கொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், பொருட்களின் விலை இன்னும் உயர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐ.தே.க.யின் ஒரு குழுவும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]For More News, Cinema News, Sports News and updates of AnyKind of News Visit Our Website www.universaltamil.com