பொதுஜன முன்னணி வேட்பாளர் மீது தாக்குதல்

பொதுஜன முன்னணி வேட்பாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் என்பவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவரால் நேற்று முன்தினம் மாலை, டயகம கொலனி பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் டயகம பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் டயகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை தேடி வருவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசாரித்து வருவதாகவும் டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தனிப்பட்ட குழுக்கிடையில் இடம்பெற்றதாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கினார்கள் என்பது பொய் எனவும் டயகம பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]