‘பொதுஜன பெரமுன’வுக்கு தலைவராகிறார் மஹிந்த

 

பொதுஜன பெரமுன கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் குறித்த கட்சிக்கு அவர் தலைமையேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் அந்தக் கட்சியில் எந்தவித பதவியையும் வகிக்க மஹிந்த ராஜபக்ஷ முன்வரவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்து கொண்டு மறைமுக ஆதரவை வழங்கி வந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 2 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பகிரங்க பிரசார நடவடிக்கையில் அவர் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைத்துவத்தை ஏற்கப்போவது குறித்து அதிகாரப்பூர்வமான முறையில் அவர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகும் அறிவிப்பை விடுக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]