முகப்பு News Local News பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கணபதிப்பிள்ளை மோகனுக்கு பிணை

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கணபதிப்பிள்ளை மோகனுக்கு பிணை

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த 07ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகியதுடன் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டன.

இச்சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்ச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

மேலும் இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com