பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என ஏமாற்றிய இருவர் கைது

பொதுச்சுகாதார பரிசோதகர் என தெரிவித்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சோதனை செய்து பொதுமக்களை பயமுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை நகரில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடம் பணம் சேகரித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு வழங்கிய தகவலை அடுத்து, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]