பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது!!

பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டு இலங்கையில் பேஸ்புக் தடையின்றி இயங்குகின்றது.

நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து கடந்த 7 ஆம் திகதிமுதல் நாட்டில் சமூகவலைத்தளங்களுக்கு பாதுகாப்பு கருதி தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேஸ்புக் தொடர்பில் தற்காலிக தடை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் பேஸ்புக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை வந்து இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பேஸ்புக் மீதான தற்காலிக தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டு இலங்கை வாழ் மக்கள் பேஸ்புக்கை தடையின்றி பார்க்கக்கூடியவாறு உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]