பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கம்….

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை தடை செய்ய எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சமூக வலைத்தளமான Facebook ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் பேஸ்புக் மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூகவலையமைப்புகளை பாவிக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக ட்விட்டரில் தகவல்கள் வெளியாகின
இது தொடர்பாக எமது செய்தி நிறுவனம் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவை தொடர்பு கொண்டு வினவியிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் ஊடகப்பிரிவு
” பேஸ்புக்கையோ அல்லது வேறு எந்த சமூக வலைத்தளங்களையோ தடைசெய்ய எவ்வித உத்தரவையும் தொலைத்தொடர்பு ஆணைக்குழு பிறப்பிக்கவில்லை.
மேலும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு இது தொடர்பில் எவ்வித உத்தரவை பிறப்பிக்கவில்லை.

எனினும் கண்டியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சமூகவலைத்தளங்களை கண்காணிக்கும் படி பாதுகாப்பு அமைச்சினால் எம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. “

எனினும் இலங்கையின் பல பகுதிகளில் Facebook, Whatsapp மற்றும் Instagram ஆகிய சமூக வலையமைப்புகளை பாவிக்கமுடியாமல் உள்ளதாக வாசகர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]