பேஸ்புக்கால் பேஸ்புக் நிறுவனருக்கு ஏற்பட்ட தலைவலி!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

‘பேஸ்புக்’ இல்லை என்றால் இயக்கமே இல்லாத நிலை தற்போது உள்ளது என்பதை மறுக்க இயலாது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த குழு,  20 ஆம் தகதி உத்தரவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]