பேலியகொட உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

பேலியகொட உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரவு 7 மணி முதல் இந்த 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, பெஹெலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி தெற்கு நீர்வழங்கல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திடீர் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]