பேர்பசுவல் ட்ரசரீஸ் மீதான தடை ஆறு மாதங்கள் நீடிப்பு

பேர்பசுவல் ட்ரசரீஸ்

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் (Perpetual Treasuries Ltd) மீது மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) முதல் பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கான தடை மேலும் நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி அந்த நிறுவனத்திற்கு மேலும் ஆறு மாத காலத்திற்கு முதன்மை விநியோகஸ்தராக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]