பேரூந்து தரிப்­பி­டத்தில் பேரூந்து நிறுத்­தப்­ப­டா­ததால் மாணவர்கள் பெரும் அவதி!

பண்­டா­ர­வளை ஊவா­ ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் அமைந்­துள்ள பஸ் தரிப்­பி­டத்தில் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்­கு­ரிய பஸ்கள் நிறுத்­தப்­ப­டா­ததால் வித்­தி­யா­லய மாணவ மாண­விகள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர் என்று பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அ. அர­விந்­த­குமார் போக்­கு­வ­ரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபா­ல டி சில்­வா­விற்கு அவ­சரக் கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்ளார்.

இக்­ க­டி­தத்தின் பிர­திகள் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை தலைவர், ஊவா மாகாண இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை டிப்போ முகா­மை­யாளர் ஆகி­யோ­ருக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளன.
அக்­க­டி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ஊவா ­ஹைலண்ட்ஸ் தமிழ் மகா வித்­தி­யா­லய அதிபர் தமது வித்­தி­யா­லய மாணவ மாண­வி­களை ஏற்றிச் செல்­வ­தற்கு இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை பஸ் சார­திகள் தயக்கம் காட்டி வரு­வ­தா­கவும் வித்­தி­யாலய அய­லி­லுள்ள இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை பஸ் தரிப்­பி­டத்­திலும் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை பஸ்கள் நிறுத்­தப்­ப­டு­வ­தில்­லை­யென்றும் எமது கவ­னத்­திற்கும் போக்­கு­வ­ரத்து அமைச்­சரின் கவ­னத்­திற்கும் கொண்டு வந்­துள்ளார்.

வித்­தி­யா­லய மாணவ மாண­வி­களின் பெற்­றோரும் மேற்­கு­றிப்­பிட்ட விடயம் குறித்து எனக்கு புகார் செய்­துள்­ளனர். ஏற்­க­னவே இப்­பி­ரச்­சினை தொடர்­பாக தங்­களின் மேலான கவ­னத்­திற்­கு கொண்டு வந்த பின்­னர் தாங்­களும் வித்­தி­யா­ல­யத்தின் அரு­கே­யுள்ள தரிப்­பி­டத்தில் பஸ்­களை நிறுத்தி மாணவ மாண­வி­களை பாது­காப்­பாக ஏற்றிச் செல்­லு­மாறு சார­தி­க­ளுக்கு உத்­தர­விட்­டி­ருந்­தீர்கள். ஆனாலும் தங்­களின் உத்­த­ர­வி­னையும் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை பஸ் சார­திகள் புறக்­க­ணிக்கும் நிலை­யி­னைத்தான் எம்மால் அவ­தா­னிக்க முடி­கின்­றது. சார­தி­களின் இது போன்ற செயல்­பா­டு­க­ளினால் மேற்­படி வித்­தி­யா­லய மாணவ மாண­விகள் பெரும் அசெளகரியங்­களை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். ஆகவே தாங்கள் இது விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்தி குறிப்­பிட்ட பஸ் தரிப்­பி­டத்தில் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை பஸ்­களை நிறுத்தி மேற்­படி வித்­தி­யா­லய மாணவ மாண­வி­களை பாது­காப்­புடன் ஏற்­றிச்­செல்­லு­மாறு உத்­த­ர­விடும் படி கேட்­டுக்­கொள்­கின்றேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]