பேரூந்து கட்டணம் திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம்

பேரூந்து கட்டணம் திருத்தம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) இறுதி தீர்மானத்தை எதிர்பார்த்துள்ளதாக அனைத்து தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வடைந்துள்ள நிலையில் பேரூந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அச்சங்கம் வலியுறுத்தியுள்ளதை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பிலான பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்துக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை சரியான தீர்வை அரசாங்கம் வழங்காத நிலையில், இன்று குறித்த பிரச்சினைக்கு இறுதி தீர்மானம் முன்வைக்கப்படுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, படகு உரிமையாளர்கள் சங்கம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]