பேருவளையில் வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பலி

பேருவளையில் பாரவூர்தி ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) காலை 8 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை சபுகொடை விகாரையின் அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது முத்தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் பொலிஸ் உத்தியோகஸ்தர்

படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் வைத்தியசாலை தகவல்களின் படி படுகாயமடைந்த இளைஞன் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]