நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!

பேருந்து கட்டணங்கள் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]