பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதா இல்லையா?

பேருந்து கட்டணங்ள்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்களை எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய மீண்டும் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அஞ்சன பியஞ்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்தே குறித்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலையை மாத்திரம் காரணம் காட்டி பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளதாக கூறுப்படுகின்றது.

முன்னதாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் பல முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இரண்டு வருடத்திற்கு பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட மாட்டாது எனும் இணக்கப்பாட்டிற்கு அமையவே புதிய பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]