பேருந்து கட்டணக் குறைப்பு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளைய தினம் (03) போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நடைபெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் பேருந்து கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை குறித்த சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டீசலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஒரு மாதத்திற்குள் டீசலின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]