பேருந்துகளில் உறங்கும் பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் பெண் கைது

பேருந்துகளில் உறங்கும் பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் பெண் கைது

பேருந்துகளில் உறங்கும் பயணிகளின் பணத்தை கொள்ளையடிக்கும் பெண்ணொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் இந்த பெண் கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் தனது கைவரிசையை காட்டியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜரத்னம் ராதா என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, இப்பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த நபரிடம் 2000 ரூபாய் பணத்தை திருட முயற்சித்த போதே இப்பெண் பயணிகளிடம் சிக்கியுள்ளார்.

இதேவேளை மற்றுமொரு பயணியிடம் திருடிய 9500 ரூபா பணம் மற்றும் தொலைத்த பையையும் இந்த பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தையுடன் பேருந்தில் ஏறினால் ஆசனம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உத்தியை கையாண்டுள்ள இவர், தனக்கு அருகில் உறங்கும் பயணிகளிடம் பையை திருடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவ்வாறான திருட்டு கும்பல்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]