பேராதனை வைத்தியசாலை முதன்முதலாக தாயின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு சத்திர சிகிச்சை!

கண்டி, பேராதனை வைத்தியசாலை வைத்திய குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தன.

இதனால் Teratoma என்ற நோய்த்தன்மையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வித்தியாசமான முறையில் வைத்தியர்களால் பிரசவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தலையில் இருந்து நெஞ்சு பகுதி வரை மாத்திரம் கர்ப்பப்பையில் இருந்து வெளியே எடுத்து சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சத்திர சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையை முழுமையாக வெளியே எடுத்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கையில் இவ்வாறான சத்திரசிக்சை ஒன்று மேற்கொண்டு, குழந்தையின் உயிரை பாதுகாப்பாக காப்பாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். குழந்தை சுவாச பகுதியை தடுக்கும் வகையில் காணப்பட்ட கட்டியை சத்திரகிசிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது கடினம் என்பதனால், தற்காலிகமாக குழந்தையின் வாய் வழியாக அதனை நீக்க முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்துள்ளனர்.

பேராதனை வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்ட கடந்த 40 வருடங்களுக்குள் இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில்லை எனவும் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தை பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தையின் தலை மற்றும் கழுத்து பிரதேசம் மாத்திரம் வெளியே எடுக்கும் போது குழந்தை மற்றும் தாயின் தொப்புள் கொடி தொடர்பு துண்டிக்கப்படாமல் அதன் ஊடாக குழந்தைக்கு மூச்சு வழங்க வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]