பேரறிவாளன் சிறை விடுவிப்பு நீடிப்பு

ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பேரறிவாளனுக்கு தமிழக அரசாங்கம் மேலும் 30 நாட்களுக்கு சிறைவிடுவிப்பு வழங்கியுள்ளது.

பேரறிவாளனுக்கு தமிழக அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மாத கால சிறைவிடுவிப்பை வழங்கியது.

இதன்படி, நேற்று மாலையுடன் அவரது சிறைவிடுவிப்பு காலம் நிறைவடைந்தது.

இந்த நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் சில காலம் சிறைவிடுவிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]