பேய் இருக்கா ???

பேய் என்ற சொல்லைக் கேட்டாலே பலரும் பயத்தால் நடுங்குவர். ஆனாலும், உண்மையில் பேய் என்பது இருக்கா? அது ஒரு பொருளா? அல்லது சூட்சும சக்தியா?

சாதாரண மனிதனின் கண்ணுக்குப் புலப்படுமா? அல்லது விசேடமானவர்கள்க ண்ணுக்குத்தான் புலப்படுமா? ஆட்களை பேய் பிடிக்குமா? பேய்களுடன் பேசுவது எல்லாம் உண்மை? போன்ற பல வினாக்கள் மனிதனின் ஆரம்ப காலம் முதலாகவே இருந்து கொண்டேதான் வருகின்றன. இத்தகு கேள்விகளுக்கான பதில், ஒரு சாரார் இவை அனைத்தும் உண்மை என்றும் ஒரு சாரார் இவை எல்லாம் கட்டுக் கதை என்றும் சொல்லும் போக்கே பன்னெடுங்காலமாக எமது சமூகத்தில் இருந்து வருகிறது.

சரி நாம் இப்போது பேய் பற்றிய சில சுவாரசியத் தகவல்களைக் காண்போம். பொதுவாகப் பேய் என்பது இறந்தவர்களின் உயிர் இந்த உலகைவிட்டுப் போகாமல் இந்த உலகத்திலேயே சுற்றித் திரிந்தால் அதனையே பலபேர் பேய் எனச் சுட்டுகின்றனர்.

ஆனாலும், பேய் என்பது மனித சமூகத்துக்கு ஒவ்வாத ஒரு அமானுஷ்ய சக்தி என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்ட்ட ஒன்று. மதக் கொள்ளைகளும் இதனையே ஏற்கின்றன.

கிறிஸ்தவம் சாத்தான் என்றும் இஸ்லாம் சைத்தான் என்றும் கூறுவது மனித சக்திக்கு ஒவ்வாத அல்லது கடவுளுக்கு எதிரான கெட்ட சக்தியை எனலாம். இந்துக் கொள்கையில் இது பலவாறு பெருகிக் கிடக்கின்றது எனலாம். பேய் என்பதை ஆவி, பிசாசு, துர்ஆத்மா போன்ற பல பெயர்கள் கொண்டு அழைத்தாலும், இவற்றிடையே நில வேறுபாடுகள் உண்டு என்கின்றனர். தனது இறப்புக்காலம் வருவதற்கு முன் இறந்தவர்கள் பேயாக அலைவர் என்பது பெரும்பான்மையினரின் நம்பிக்கை. இது ஒரு மூடநம்பிக்கை எனினும் ஆன்மீக ரீதியில் இது அதிகளவில் நம்பப்படுகிறது.

ஆவி பற்றிய நூல்களில் பொதுவாக, ஆவியானது காலகள் அற்று, கட்டான உடம்பு அற்று, வெள்ளை அல்லது கருமை நிற சாயலில் அந்தரத்தில் அலையும் எனக் கூறப்பட்டுள்ளது. சரி, இத்தகு ஆவி நமது அருகே அல்லது நமது வீட்டிலே இருக்கின்றாதா? என்பதை அறிய சில வழிகளை எம்முன்னோர் கூறி இருக்கின்றனர். அத்தகு முறைகளைக் காண்போம். திடீரொன காரணமே இல்லாமல் நமது உடல் பதட்டம் அடைந்தால், நடுங்கினால்நம்மைச் சுற்றி அமானுஸ்யம் இருப்பதாக எண்ணலாம். இரவில் அமைதியாக இருக்கும் போது விசித்திரமான சப்தம் கேட்டால், அமானுஸ்யம்உ லவுவதாக அர்த்தம். நீங்கள் இருக்கும் அறை அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்தால். அங்கு பேய் இருப்பதாக அனுமானிக்கலாம்.

பூனை, நாய் போன்ற விலங்குகளின் செயற்பாட்டை வைத்தும் உணரலாம். இத்தகு விலங்குகளின் பார்வைக்குப் பேய்கள் நன்றாகத் தெரியுமாம். நாய் அனுகிக் கொண்டு மக்களுக்குள்ளே நெருங்கி வந்தால், அந்த நாய் பேயைக் கண்டுவிட்டதாகக் கொள்ளலாம். மேலும், நாய், பூனை போன்றன அந்திரத்தைப் பார்த்து தனது செய்கையை வெளிப்படுத்தினாலும் பேய் உலாவுவதாக உணரலாம். அடுத்து, நம் இறந்த சடங்கின் போது பயன்படுத்தும் நறுமணத் திரவிய வாசம், சாதாரண நாளில் நுகர முடிந்தாலும் அந்த உயிர் அவ்வழி வருவதாக உணரலாம். அடுத்து, பேய் ஒரு வீட்டில் உள்ளது என அறிய, வீட்டின் மண்டபத்தில் நடுவில் விளக்கேற்றி, தேங்காயை வைத்தால், தேங்காய் சுற்றினால் பேய் இருப்பதாகக் கொள்ளலாம்.

அடுத்து, பசு மாடு ஒன்றை வீட்டினுள் விட்டு, அது விரண்டு ஓடினால், பேய் இருப்பதாகக்கொள்ளலாம்.

இவ்வாறு பல வழிமுறைகளில் பேய் இருப்பதை உணர முடியும். பேயை உணர்வதற்குப் பல பண்பாட்டு மரபினரும் பல வழிகளை உரைக்கின்றனர்.

பேய் என்பது,

தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பும் பேய்கள் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. பேய்கள் அல்லது ஆவிகள் ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
எமது எதிர்காலத்தைபற்றி பேய்கள் நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு சில நேரங்களில் அவற்றை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும். பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர்வு (sense) மட்டும் இல்லை. பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன்தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.
பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்களுக்கு மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள்வீட்டில் அருகில் இருக்க முடியும். இது சாதாரணமாக இறப்பவர்களது ஆத்மாவாகும். அகால மரணம் அடைபவர்கள் தனது இறப்புக் காலம் வரையிலும் இவ்வுலகத்திலேயே அலையுமாம். இவை தங்களுடைய ஆசையை நிறவேற்றப் பல முற்சிகளைச் செய்யுமாம். குழந்தை பேய்கள் தேவதைகள் என அழைக்கப்படுவார்களாம்.

பேய்கள் மனிதனுடன் தொடர்பு கொள்வதற்காக கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். இலத்திரனியல் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களுக்கு இலத்திரனியல் பொருட்களின்வே கத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி உண்டு.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, ,கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலாக தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவை சினிமாவில் காண்பிக்க படும் அனைத்தும் கற்பனை மட்டுமே.

ஆவிகள் எப்படி ஏன் பூமிக்கு வருகின்றன என்பதைப் பற்றி பார்போம். ஆரம்ப அத்தியாயங்களில் மரணம் ஏற்பட்டவுடன் இறப்பு தேவதைகளால் உயிரானது அழைத்துச் செல்லப்படும் இடங்களைப் பற்றயும் அவைகள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பற்றியும் விரிவாகவே பார்த்து இருக்கிறோம். அப்படி பயணப்படும் நேரத்தில் அதாவது ஆவிகளுக்கான தண்டனையோ சன்மானமோ கொடுக்கப்படும் நேரத்திலும் அவ்வப்போது ஆவிகள் பூமிக்கு வர அனுமதிக்கப்படுவது உண்டு.

அதற்குக் காரணம் பூமியில் உள்ள ஆவியின் சந்ததியினர் இறந்துபோன அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். அவர்களுக்காக என்ன என்ன செய்கிறார்கள் என்பதை சூட்சம் தேகிகள் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி அவர்கள் பூமிக்கு வரும்போது தங்களைப் பற்றி சந்ததிகள் மறந்து இருந்தால் ஆத்திரப்படுவார்கள். நினைவுகளோடு இருந்தால் ஆசிர்வதிப்பார்கள்.

மேலும் இறந்து போய் ஒரு வருடத்திற்குப் பிறகு சில குறிப்பிட்ட வரையரையளுக்கு உட்பட்டு ஒரளவு சுதந்திரத்துடன் ஆவிகள் பூமிக்கு வந்து செல்ல மேலுலகத் தேவதைகள்

அனுமதி அளிக்கின்றன. தங்களது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கம் நரகம் என்ற வாழ்ககைத் தரத்தை ஆவிகள் மேலுலகில் பெற்றிருந்தாலும் அடுத்து ஓர் பிறப்பை அவைகள் பெறும்வரை பூமிக்கு வந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அவ்வப்போது ஆவிகள் தங்களது பூர்வ கால வசிப்பிடங்களுக்கு வந்து சென்றாலும் நிரந்தரமாக அவைகள் பூமியில் தங்குவது இல்லை. தங்கவும் முடியாது. கருடபுராணத்தின் மிகப் பழைய பிரதி ஒன்றில் ஆவிகள் ஒரு மாதத்தில் 240 நாழிகை
மட்டுமே பூமியில் நடமாட முடியும் என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் ஆவிகள் மனித உடலில் எவ்வளவு நேரம் தங்க முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டபோது 15 நிமிடங்கள் மட்டுமே ஆவியால் மனித உடலை ஆக்கிரமிக்க முடியும் என்பது தெரியவந்து
உள்ளது.பேய் இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஆவிகள் பூமியில் நிரந்தரமாகத் தங்க இயலாது என்பதும் அதே நேரம் பூமிக்கும் தங்களது சொந்த உலகிற்கும் அலைந்து கொண்டு இருக்க மட்டும்தான் முடியும் என்பது தெளிவாகிறது.

மேலும் பூமிக்கு வரும் ஆவிகள் தாங்கள் வாழ்ந்தபோது எந்த இடத்தில் விரும்பி வசித்தனரோ அந்த இடங்களுக்குத்தான் வந்து செல்ல விரும்புகிறது. உயிர் பிரிந்த இடத்தில்தான் ஆவிகள் நடமாடும் என்பது தவறான நம்பிக்கையாகும்.
இதை வைத்துப் பார்க்கும் போது ஆவிகளின் ஆயுட் காலம் எந்தக் கணக்கிற்கும் அகப்படாத ஒரு புரியாத புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவ புண்ணியங்களின் அளவில் சொர்க்க நரகங்கள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளில் வாசம் புரியும் காலம் பிறப்புக் கடவுகளின் கையிலேயே இருப்பது புரிகிறது.

யாருக்கு எப்போதும் பூமி வாசம் கொடுக்க வேண்டும் என்று அவன் கருதுகிறானோ அதுவரை ஆவிகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆனாலும் கூட சூட்சம் தேகத்திலேயே வாழும்படி நேரிடுகிறது. அப்படி வாழ்வது தண்டனையா சன்மானமா என்பது நமக்குப் புரியவில்லை. அதைக் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் நமக்கு இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]