பேனாமுனையில் விமானத்தை கதிகலங்க செய்த மர்மநபர்!

கூரிய ஆயுதத்தை வைத்து விமானப்பணிப் பெண்ணை சிறைபிடித்து வைத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்சா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் பீஜிங் நோக்கி 1350 எண் கொண்ட ’ஏர் சைனா’ விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானம் இன்று காலை 8.40 மணியளவில் புறப்பட்டு சென்றதுடன், காலை 11 மணியளவில் அந்த விமானம் பீஜிங் நகரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 10 மணியளவில் ழெங்ழோ நகர விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, ‘எக்சிகியூட்டிவ் கிளாஸ்’ பகுதியில் கூரிய ஆயுதத்தை வைத்து விமானப்பணிப் பெண்ணை சிறைபிடித்து வைத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமானத்தை அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார். இதையடுத்து, ழெங்ழோ விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

காவல்துறையினரும், பாதுகாப்பு மற்றும் அதிரடிப் படையினரும், அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் குவிக்கப்பட்டன.

இந்நிலையில், விமானம் தரையிறங்குவதற்குள் பணிப்பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்த நபர்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி அவரை விடுவித்துள்ளனர்.

அந்த மர்மநபர் பேனா முள்ளை(நிப்பு) பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டியதுடன், சம்பவம் நடைபெற்ற விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தின் மூலம் பீஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]