பேட்ட வசூலில் அங்கு மட்டும் வெறும் 10 சதவீதத்தை தான் முதலீட்டில் எடுத்தார்களாம்!

ரஜினி படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இவரின் படங்கள் ஏனைய மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்யும். கடந்த வருட இறுதியுல் வெளியான 2.0 படம் தெலுங்கிலும் வந்தது. முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ரூ 10 கோடி வசூலை செய்தது.

ஆனால் கடந்த 10 ம்திகதி  வெளியான பேட்ட படம் முதல் நாளில் ரூ 1.6 கோடியை மட்டும் தான் வசூல் செய்துள்ளது. 2.0 படத்துடன் ஒப்பிடும் போது வெறும் 20 சதவீதம் மட்டுமே.

இது படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அசோக் வல்லபனேனி என்பவருக்கு வருத்தமே. ஒரே நேரத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களின் படம் வெளியானதே காரணம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தியேட்டர் கிடைப்பதில் சிக்கிலும் இருந்தது. இதனால் தயாரிப்பாளர் வெறும் 10 சதவீதத்தை தான் முதலீட்டில் எடுத்துள்ளதாக தெலுங்கு வட்டாரம் தெரிவிக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]