பேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு

பேட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு பலத்த பாதுகாப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நடித்து வருகிறார். இதற்கு பேட்ட என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் இந்தி நடிகர் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா,பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில், பேட்ட படப்பிடிப்பு முதல் கட்டமாக டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்தது.

அதன்பின் கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடந்ததோடு அடுத்த கட்டமாக பேட்ட படப்பிடிப்பை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரஜினி கடந்த 7ஆம் திகதி சென்னையில் இருந்து லக்னோவுக்கு சென்றதை தொடர்ந்து அவரது பாதுகாப்புக்காக 40 பாதுகாவலர்களும் விமானத்தில் சென்றனர்.

அதுமட்டுமன்றி லக்னோ விமான நிலையத்தில் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடி, அவரது பெயரை உச்சரித்து கோஷம் போட்டதோடு, அங்கிருந்து ரஜினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்தோடு லக்னோவில் இம்மாதம் முழுவதும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருவதோடு, சவுக், மகினாபாத், சீதாபூர், பராபாஸ்கி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள படக்குழு, இதற்காக கையடக்க தொலைபேசிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

மேலும் ரஜினிகாந்தின் பாதுகாப்புக்கு 25 பொலிஸார்கள் லக்னோ பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ரசிகர்கள் ரஜினியை நெருங்க விடாமலும், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேட்ட படப்பிடிப்பில் பேட்ட படப்பிடிப்பில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]