பேட்ட படத்தில் கைதி வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்

கார்த்திக் சுப்புராஜ், ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பேட்ட படத்தில், ரஜினி கைதி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் பேட்ட. இதில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். நடிகை திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 165வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அசத்தலாக இருந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் ரஜினி ரவுடி கெட்டப்பில் தோன்றினார். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினி மற்றும் விஜய் சேதுபதியின் பேட்ட லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. தற்போது லக்னோவில் படபிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினி-திரிஷா காட்சிகள் எடுக்கப்படவுள்ளன. மேலும் விஐய் சேதுபதிவுடனான சண்டை காட்சிகளும் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி- திரிஷா இடையே வரும் காட்சிகள் முக்கியமான பிளாஸ்பேக்காக இருக்கும் என்பதால் இயக்குநர் இதை சஸ்பென்ஸ்ஸாக வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதில் ரஜினி மிசா கைதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. 1971 ஆம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் தான் இந்த மிசா சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ் எந்த ஒரு நபரையும் நிச்சயமற்ற குற்ற காரணங்களின் கீழ் கைது செய்யலாம். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய பிளாஸ்பேக் இருக்கும் எனத் தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]