‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ள சசிகுமார்

‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ள சசிகுமார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் ஆகியோர் நடித்துள்ள நிலையில், சசிகுமாரும் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது.

ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள்.

இதில் ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

நேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார்.

இது ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு, பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பேட்ட' படத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]