பேட்ட படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே

பேட்ட படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிரூத் முதன் முறையாக ரஜினியுடன் பேட்ட படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்பாக படத்தின் ‘மரண மாஸ்’ சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் பேட்ட படத்தின் பாடல் மேக்கிங் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மரண மாஸ் பாடலாக அறிவிக்கப்பட்டதைப் போலவே தற்போது பாடலும் படு குத்துப்பாட்டாக தயாராகி வருவது மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. வீடியோவில் இசையமைப்பாளர் தனது குழுவுடன் படு குஷியாக பாடலுக்கு இசையமைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

இந்தப் பாடல் வரிகளை ஆழப்போறான் தமிழன் பாடல் புகழ் விவேக் எழுத, நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]