பேட்ட டிரெய்லரின் ஒரு நாள் சாதனையை 9 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம் டிரெய்லர்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்பட டிரெய்லரின் ஒருநாள் சாதனையை விஸ்வாசம் திரைப்படத்தின் டிரெய்லர் 9 மணி நேரத்தில் முறியடித்துள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் அதை செம டிரெண்ட்டாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

பொங்கல் வெளியீடாக அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகள் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட டிரெய்லர், இதுவரை எந்த தென் இந்திய சினிமாவும் செய்யாத புது வரலாறு படைத்துள்ளது. இணையத்தில் சுமார் 10 லட்சம் லைக்ஸை பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் இது தான். சமூக வலைதளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. ‘பேட்ட’ படத்தின் டிடரெய்லர் செய்த ஒரு நாள் சாதனையை 9 மணி நேரத்தில் ‘விஸ்வாசம்’ டிரெய்லர் முறியடித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]