பேச்சுவார்த்தையை இரத்து செய்தது வடகொரியா

வட – தென்கொரிய அரசுகள் இடையே பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (16) இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து மேற்கொண்ட இராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்த பேச்சுவார்த்தையை வடகொரியா இரத்து செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]