பெல்லன்வில விமலரத்ன தேரர் காலமானார்

விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள்

வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

பெல்லன்வில விமலரத்ன தேரர் நேற்று காலை மியன் குமரா என்ற யானைக்கு உணவு கொடுக்கும் போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

அதனையடுத்து, காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெல்லன்வில விமலரத்ன தேரரது இடுப்பு எலும்பு உடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]