பெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை செய்தது இவன் தான்- சிக்கிய புதிய ஆதாரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு இளைஞர் வெகுவிரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பொலிஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக அவா் கடந்த சில காலமாக பெரிய கும்பல் ஒன்றுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்து வந்ததாக தெரிகிறது.

இவ்வளவு பணத்தை அவர் செலவு செய்தார் என்றால் பெண்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் அதிகளவு பணம் பறித்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் இச்சம்பவத்தில் பிரபலங்களுக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞா் ஒருவா் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்றும், அவரைத் தொடா்ந்து மேலும் சிலா் இதில் சிக்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த நபர் கேரளாவை சேர்ந்த கெரோன் என்றும் பெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்த சைக்கோ என்றும் திருநாவுக்கரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கேரளாவில் இருந்து அடிமட்ட வாழ்நிலையில் இருக்கும் இளம் பெண்களை வேலைக்கு என கூட்டிக் கொண்டு வந்து அவர்களை கெரோன் தவறாக பயன்படுத்தினான் என்றும் தெரியவந்துள்ளது.

அவர் இரண்டு நாளில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]