பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்று விட்டு தற்கொலை செய்துக் கொண்ட தந்தை! தாய் தீவிர சிகிச்சை பிரவில்…

பெற்ற மகளை தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கமணி (35)- முனீஸ்வரி (27) தம்பதிகள். இவர்களுக்கு சந்தோஷ்குமார் (7) என்ற மகனும், வர்‌ஷஹரிணி (4) என்ற மகளும் உள்ளனர்.

இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக தனித்து வாழ்ந்து வந்த நிலையில், ஊர்ப்பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தியதை அடுத்து கடந்த 2 மாதங்களாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே, மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட தங்கமணி பிரச்சனை செய்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு மனைவி இனங்காததால், சுத்தியலால்  தலையில் முனீஸ்வரியை அடிக்க அவர் மயக்கமடைந்துள்ளார்.

இறந்துவிட்டதாக எண்ணிய தங்கமணி, கோபத்தில் மகளின் கழுத்தை ஆறுத்துள்ளார். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. பின் தங்கமணி தூக்கிட்டு தற்கொலை செய்து க் கொண்டுள்ளார்.

மயக்கம் தெளிந்த முனீஸ்வரியின் அலறல் கேட்டு வந்த அயலவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]