பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை

அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான ஆதாராங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

ஆகவே அவரை விடுவிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்படி சந்கேநபராக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]