பெற்றோலியம் கூட்டுத்தாபன வடமாகாண முகவர்களுடனான கலந்துரையாடல்

பெற்றோலியம்

யாழ்ப்பாணம்; பெற்றோலியம் கூட்டுத்தாபன வடமாகாண முகவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

பேற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகியது.

இக்கலந்துரையாடலில் கனிய வளம் மற்றும் பெற்றோலிய அமைச்சர் ; அர்ஜுன ரணதுங்க கலந்துகொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பெற்றோலிய தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கான உத்திகள், தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றார்.
இந்த கலந்துரையாடலில், பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள், வடமாகாண பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் முகாமையாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகள், முகவர்கள் எனப்பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பெற்றோலியம் பெற்றோலியம் பெற்றோலியம் பெற்றோலியம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]