பெற்றோர்களே உங்களுக்கோர் எச்சரிக்கை பதிவு- தப்பி தவறி கூட உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போடாதீங்க உஷார்!!

அதிகப்படியான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களது குழந்தையின் வளர்ச்சியையும், சுட்டித்தனத்தையும் கண்டு மகிழ முடிகிறது.

ஆனால் துரதிருஷ்டவசமாக மற்றும் உங்கள் சிறந்த நண்பர்கள் இணையத்தில் இருப்பதில்லை. உங்கள் குழந்தைகளின் அந்த அழகான புகைப்படங்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்பும் சில பயங்கரமான மிருகங்களும் இணையத்தில் உலவி வருகின்றனர்.

உங்கள் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் சென்றடைவதற்கான சந்தர்பங்கள் இங்கே ஏராளம். எனவே உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவதற்கு முன் சற்று யோசியுங்கள்.

வளர்ந்து வரும் போட்டோ ஷேரிங்
இன்ஸ்டாகிராம் இப்போது மிக அதிக நபர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மற்ற சமூக வலைதளங்களின் பங்கு குறைவு என்றும் சொல்லிவிட முடியாது. நீங்கள் உங்கள் குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்யும் போது, உங்கள் குழந்தையை பற்றி புகழ்ந்து எழுதி, அதனோடு ஹேஸ் டேக்கையும் போட்டு விடுகிறீர்கள்.

இறுதியில் பல கமெண்ட்டுகளையும், ஷேர்களையும் பெற்று குஷியாகிவிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த அதே ஹேஷ் டேக்கை கொடுத்து யாரோ ஒருவர் தேடினாலும் உங்கள் குழந்தையின் புகைப்படங்களை அவர்கள் பார்த்துவிட முடிகிறது. இதனால் உங்கள் குழந்தை டிஜிட்டல் ரீதியாக கடத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

குழந்தை ஆபாசம்
இன்றைய காலகட்டத்தில், குழந்தை தானே என்று நினைத்து, குளிக்கும் போட்டு, டையப்பர் உடன் எடுத்த போட்டோக்கள், அரை நிர்வான புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை நிறுத்துங்கள்.

விளம்பரம்
உங்கள் அனுமதியின்றி உங்களது குழந்தையின் புகைப்படம் ஒரு பொருளை விற்பனை செய்வதற்கான விளம்பர படமாக பயன்படுத்தப்பட்டால் அது சரிதானா? இணையத்தில் உலவி வரும் சிலர் இது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். உங்கள் குழந்தையின் அழகான புகைப்படங்களை திருடி விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஜாக்கிரதை..!

என்ன செய்வது?
இதற்காக சமூகவலை தளங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் அழித்துவிடுவதா? இல்லை. உங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களுக்கு மட்டும் புகைப்படம் தெரியும் படி செட்டிங்குகளை மாற்றுங்கள். மேலும் இனிமேல் புகைப்படத்தை பதிவு செய்யும் போது இந்த சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

பிரைவேட்டாக இருக்கட்டும்
உங்களது நெருங்கிய சில நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் புகைப்படம் தெரியுமாறு பிரைவசி செட்டிங்குகளை மாற்றுங்கள்.

வாட்டர் மார்க்
உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களின் மீது வாட்டர்மார்க்குகளை வையுங்கள். இதனால் யாரும் அதை எடுத்து வேறு சில நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. இந்த வாட்டர் மார்க்குகள் சில ஆப்களில் இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கின்றன.

இருப்பிடத்தை ஷேர் செய்யாதீர்கள்
உங்கள் இருப்பிடத்தை ஷேர் செய்வதன் மூலம் பல பிரச்சனைகள் உருவாகும். குழந்தையின் பள்ளி போன்றவற்றை குறிப்பிடுவது வேண்டாமே..!

குழந்தையின் ஆடை
குழந்தையின் புகைப்படங்களை திருடுவதையே வேலையாக கொண்டு சிலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு குழந்தைகளின் ஆடை விஷயத்தில் கவனத்தை வையுங்கள். குறைந்த ஆடை, அரை நிர்வானம் போன்ற புகைப்படங்கள் வேண்டாம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]