பெற்றோர்களினால் விபரீத முடிவு எடுத்த 16வயது இளைஞன் – பரிதாப பலி!!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் ஒருவகை நச்சு திரவத்தினை அருந்தியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் பெற்றோரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெற்றோர் குறித்த மாணவனை யாழ்ப்பாணத்தில் உயர் கல்வியை தொடருமாறு கோரியதற்கு அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவர், தான் வட்டக்கச்சியிலேயே உயர் கல்வியினை தொடர்வேன் என அறிவித்தள்ளார்.

இந்நிலையில் பெற்றோருக்கும் மாணவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் அன்றைய தினம் (நேற்று முனத்தினம்) இரவு வாந்தி எடுத்துள்ளதாகவும் அதனை தொடர்ந்து கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவர் அருந்தியதாக தெரிவிக்கப்படும் நச்சு திரவம் குறித்து ஆராய மாணவனின் சடலம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கபபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய தியாகேஷ்வரன் நிலாபவன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.