பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆசிரியை செய்த மோசமான செயல் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கொத்மலை பிரதேசத்தில் உள்ள   பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவர் மாணவியை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையில் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை பிரம்பால்  பலமாக அடித்துள்ளார்.

இதனால் அம் மாணவியின் கை வீங்கியுள்ளது.  மேலும் மாணவியின் பெற்றோருக்கு அறிவிக்காமல்  இரகசியமாக ஆயுர்வேத சிகிச்சை வழங்கியதாக புசல்லாவ பொலிஸார் விசாரணை மூலம் கண்டுபிடித்துள்ளனர். குறித்த தாக்குதல் பற்றி மாணவியின் தந்தை சந்தன துசித குமார, புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ம் திகதி முறைப்பாடு கொடுத்திருக்கிறார். பிரம்பால்   தாக்கியதன் காரணமாக குறித்த மாணவியின் கை வீங்கி அசைக்க முடியாத காரணத்தினால் பயந்த ஆசிரியை ஏனைய ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு  மாணவியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்  குறித்த ஆசிரியை தனது நண்பர் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவியை தங்க வைத்தது மட்டுமன்றி அம் மாணவி  கீழே விழுந்து கையில் அடிப்பட்டதால் மருந்து கட்டியுள்ளதாக பெற்றோருக்கு அறிவித்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். அதன்பின்னர் உண்மையை அறிந்து கொண்ட பெற்றோர் அந்த மாணவியை புசல்லாவ வகுகப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று இது தொடர்பாக பொலிஸாருக்குஅறிவித்துள்ளனர்.

அது மட்டுமன்றி மிகவும் கோபமாக இருக்கும் இந்த ஆசிரியை மற்றமொரு மாணவரை தாக்கியதில் கண் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]